“திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணியப் போவதில்லை என சபதம் ஏற்ற பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மீண்டும் காலணி அணிந்து கொண்டார்.

தமிழக பாஜக தலைவராக இருந்தபோது திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்ற அண்ணாமலை தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அண்ணாமலை காலணி அணிந்துக் கொண்டுள்ளார்.

இதைதொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:-நான் இன்று எந்த பொறுப்பிலும் இல்லாத அடிப்படை தொண்டன்.

ஆனால் நிச்சயமாக வரும் 2026ம் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்பதில் முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான பிறகு, அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலிமை சேர்த்த பிறகு தமிழக மக்களின் மனநிலை மாறியிருக்கிறது.

தமிழகத்தில் ஒரு வலிமையான கூட்டணி களத்தில் இருக்கிறது. அதனால், திமுக அரசை அகற்றப்பட வேண்டும் என்கிற முடிவை மக்கள் எடுத்துள்ளனர்.

அதிமுக- பாஜக கூட்டணி அறிவித்ததற்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை போல. அதனால், காலை முதல் வேலையாக அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனக்குமுறலாகவும், அவருக்கு ஏற்பட்ட அச்சமாகவும் தான் அந்த அறிக்கையை பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.”,

Share.
Leave A Reply