இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றக் கட்டடத்தொகுதி, தியவன்னா ஓயா உள்ளிட்ட வளாகம் வெசாக் அலங்காரங்கள் மற்றும் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டது.

சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலாளர் குழுவின் வழிகாட்டலில் பாராளுமன்ற இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய பிரிவுகள், பாராளுமன்ற பணியாளர்களின் பௌத்த சங்கம் மற்றும் இலங்கை இராணுவம் இதற்கான பங்களிப்பை வழங்கியிருந்தன.

இதேவேளை, இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கை பாராளுமன்றத்தினால் பாராளுமன்ற வளாகத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தியவன்னா பௌத்த பக்தி கீதம் நிகழ்வு’ மே 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 6.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply