ரஷியா மொத்தம் 69 ஏவுகணைகள் மற்றும் 298 டிரோன்களை நள்ளிரவில் ஏவி உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இவ்வளவு உக்ரைன் பிரதேசத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று உக்ரைன் விமானப்படை ஊடகப் பேச்சாளர் யூரி இக்னாட் தெரிவித்தார்.
கீவ் நகரத்திலேயே நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். டிரோன் பாகங்கள் குடியிருப்பு கட்டிடங்களையும் ஒரு தங்குமிடத்தையும் சேதப்படுத்தின.
சைட்டோமிர் பகுதியில் இறந்தவர்களில் 8, 12 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறார்கள் அடங்குவர்.
க்மெல்னிட்ஸ்கியில் நான்கு பேரும், மைக்கோலைவில் ஒருவரும் இறந்ததாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. மார்கலிவ்கா கிராமத்தில் பல வீடுகள் தரைமட்டமாயின.
ரஷியாவின் நடவடிக்கைகள் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கோபத்தை வெளிப்படுத்தினார்.
‘சாதாரண நகரங்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்தியுள்ளது ரஷியா. அந்நாட்டின் மீது உண்மையிலேயே வலுவான அழுத்தம் கொடுக்கப்படாவிட்டால் இந்த மிருகத்தனத்தை நிறுத்த முடியாது’ என்று கூறினார்.
ரஷியா மீது கடுமையான தடைகளை விதிக்க சர்வதேச சமூகத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
A difficult Sunday morning in Ukraine after a sleepless night. The most massive Russian air attack in many weeks lasted all night.
Russia launched hundreds of drones, cruise missiles, and ballistic missiles into Ukrainian cities and communities during the night, injuring and… pic.twitter.com/FcawH6DJD4
— Andrii Sybiha 🇺🇦 (@andrii_sybiha) May 25, 2025