காசாவில் மனதை வருத்தும் மிகவும் துன்பகரமான சம்பவம் –

ஒவ்வொரு நாளும் செய்வதை போல வெள்ளிக்கிழமை அதிகாலையில் தனது வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் வைத்தியர் அலாஅல் நஜார் தனது 10 குழந்தைகளிடமும் போய்வருகின்றேன் என சொல்லிவிட்டு புறப்பட்டார்.

இளைய மகள் சைடன் பிறந்து ஆறு மாதங்களே ஆகின்றது, தாய் வீட்டிலிருந்து புறப்பட்டவேளை அவள் உறங்கிக்கொண்டிருந்தான்.

காசாவில் கடும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சூழலில் ஹான் யூனிசில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்ற நிலையில் வழமை போல அன்றும் வைத்தியர் அலாஅல் நஜீர் தனது குழந்தைகளை விட்டு செல்வது குறித்து கலக்கமடைந்தார்.

ஆனால் 35 வயதான அந்த தாய்க்கு – மருத்துவருக்கு வேறு வழியிருக்கவில்லை. காசாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் ,அவர் மிகவும் மதிக்கப்படும் குழந்தைகள் தொடர்பான மருத்துவராக காணப்பட்டார்.இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து காயங்களுடன் உயிர்பிழைத்த குழந்தைகளிற்கு சிகிச்சையளிப்பதற்காக அவர் செல்லவேண்டியிருந்தது.

தனது குடும்பத்தவர்களை தான் உயிருடன் பார்ப்பது அதுதான் இறுதிதடவையாகயிருக்கும் என அவர் நினைத்துப்பார்க்கவில்லை.

இதற்கு ஒரு மணிநேரத்தின் பின்னர் ,ஹான் யூனிசில் இஸ்ரேலின் விமானதாக்குதல் காரணமாக கொல்லப்பட்ட அவரது ஏழு பிள்ளைகளின் உடல்களை மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.

சைடெனின் உடல் உட்பட இருவரினது உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்தன.அவரது பத்து குழந்தைகளில் ஒன்றும் அவரது கணவரும் உயிர் பிழைத்திருந்தனர். அவரது கணவர் ஹம்டி அல் நஜாரும் ஒரு மருத்துவர்.

தந்தையும் காயமடைந்த மகனும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காசாவில் மோதல் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற மிகவும் மனதை வருத்து துன்பியல் சம்பவம் இது என்கின்றார் நாசெர் மருத்துவர் மனையின் தாதியர் பிரிவின் தலைவர் முகமட் சஹெர்.’குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த குழந்தை நல மருத்துவருக்கு இது நிகழ்ந்திருக்கின்றது,ஒரு கணதீயில் அவரது தாய்மை திருடப்பட்டுள்ளது “என அவர் குறிப்பிடுகின்றார்.

காசாவின் சுகாதார அமைச்சு வெளியிட்ட கார்டியன் உறுதிப்படுத்திய படங்கள் வீடியோக்கள்,எரிபொருள் நிலையமொன்றிற்கு அருகில் உள்ள நஜாரின் வீட்டிற்குள் இருந்து எரிந்த, துண்டிக்கப்பட்ட, குழந்தைகளின் உடல்கள் மீட்கப்படுவதை காண்பித்தன.அந்த வீடு இன்னமும் தீயில் எரிந்துகொண்டிருந்தது.

‘வீட்டின் மீது குண்டு வீச்சு இடம்பெற்றதாக அறிந்ததும் நான் உடனடியாக காரை வீட்டை நோக்கி செலுத்தினேன்,வீட்டிற்கு சென்றவேளை நான் அதிர்ச்சியடைந்தேன்,எனது மருமகன் ஆதாமை கண்டேன்,அவன் உயிர் பிழைத்திருந்தான் ஆனால் இடிபாடுகளிற்குள் காணப்பட்டான் அலாவின் கணவரின் சகோதரரான 50 வயது அலி அல் நஜார் “தெரிவித்தார்.

‘அவன் உடல் கருகிய நிலையில் காணபட்டது அவனது உடைகள் முற்றாக கிழிந்திருந்தன,ஆனால் அவன் மரணிக்கவில்லை,”என மேலும் தெரிவித்த அலி அல் நஜார் ‘எனது சகோதரன் மற்றைய பக்கத்தில் வீழ்ந்து கி;டந்தான்,தலையிலிருந்தும் மார்பிலிருந்தும் குருதி வெளியேறிக்கொண்டிருந்தது,அவரது கைதுண்டிக்கப்பட்டிருந்தது,அவர் மிகவும் கஸ்டப்பட்டு சுவாசித்துக்கொண்டிருந்தார்” என தெரிவித்தார்.

அலி மருத்துவ குழுவை உடனடியாக அழைத்துவிட்டு உயிர்பிழைத்திருந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.அதன் பின்னர் அவர் காணமால்போயிருந்த தனது ஒன்பது மருமகன்களையும் தேட தொடங்கினார்.

‘9 குழந்தைகளில் யாராவது உயிருடன் கிடைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் நான் அந்த வீட்டை சுற்றி தேட தொடங்கினேன்,குண்டு வீச்சின் அதிர்ச்சியால் அவர்கள் வீட்டிற்கு வெளியே தூக்கி எறியப்பட்டிருப்பார்கள் என நான் கருதினேன்,

ஆனால் கவலையளிக்கும் விதத்தில் முதலாவது எரியுண்ட உடல் கிடைத்தது, தீயை முற்றாக அணைத்த பின்னர் ஏனையவர்களின் உடல்களை மீட்டோம்,சிலரின் உடல்கள் எரியுண்டிருந்தன சில உடல்கள் முற்றாக சிதைவடைந்திருந்தன” என அவர் தெரிவித்தார்.

தனது மகள் ரெவானின் உடலை மீட்புபணியாளர்கள் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்ட தருணத்தில் வைத்தியர் அலா அல் நஜார் தனது வீட்டிற்கு சென்றார்,தனது மகளின் உடலை இறுதியாக ஒரு தடவை தொட்டு தழுவுவதற்கு அனுமதி தருமாறு அவர் கண்ணீர் மல்க மன்றாடினார்.

‘ரெவானின் உடலில் மேற்பகுதி முற்றாக எரியுண்டிருந்தது, தோளோ தசையோ இல்லை,என தெரிவித்த அலி எனது சகோதரனின் பிள்ளைகளின் இரண்டு உடல்களை எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை,12 வயது யஹ்யாவினதும்,ஆறு மாத பெண்குழந்தைசைடனினதும் உடல்களை மீட்க முடியவில்லை “என தெரிவித்தார்.

நஜார் மருத்துவமனைக்கு சென்று தனது கணவனினதும் மகனினதும் நிலையை பார்வையிட்டார்,மருத்துவமனையின் பிரேத அறைக்கு பிள்ளைகளின் உடல்கள் ஒவ்வொன்றாக அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் அவற்றை அடையாளம் காணும் நிலையில் தாய் இருக்கவில்லை என குறிப்பிட்டன.

theguardian

தொடர்புடைய செய்தி:‘One of the most heartbreaking tragedies’: Gaza doctor’s last goodbye before nine children killed in airstrike

Share.
Leave A Reply