உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருகோணமலைக்கு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவெளிபுரம் திருகோணமலையைச் சேர்ந்த விஜயகுமார் ஜெயராசன் (வயது 48) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

மேற்படி நபர் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி இ.போ.ச. பஸ்ஸில் சென்றுள்ளார்.

இதன்போது அவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு இரவே உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிபபடுத்தினர்.

Share.
Leave A Reply