திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி 72 வயதுடைய முதியோர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் கனரக வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (30) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (31) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.