மொனராகலை, வெல்லவாய, எத்திலிவெவ, ஊவா குடா ஓயா பிரதேசத்தில் மைத்துனரால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊவா குடா ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய, எத்திலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை தனது தாயை மண்வெட்டியால் தாக்க முயன்றுள்ளார்.

இதன்போது சம்பவ இடத்தில் இருந்த மைத்துனர், இரண்டு பிள்ளைகளின் தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய மைத்துனர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவா குடா ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply