எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன்.வணிகம், பிராண்ட்கள்வீடுகள் வாக்குவாதங்கள்- எப்போதும் எதனையாவது துரத்துவது.துரத்திக்கொண்டேயிருப்பது.
அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில் .
ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது – எல்லா வீரர்களும் கதாநாயர்களும் எப்போதும் எதனையும் துரத்திக்கொண்டிருப்பவர்கள் இல்லை எதன் பின்னாலும் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை.
அது குமுழமுனையில் ஆரம்பமானது,மாரடைப்பு .உண்மையானதுஅமைதியானது ஆனால் கடும் ஆபத்தானது.
நீரிழிவுநோய் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயார் முழுமையான அடைப்பினால் பாதிக்கப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வலதுதமனியில் கிட்டத்தட்ட 99 வீத அடைப்பு காணப்பட்டது.
அவர் பல நாட்களாக ஆபத்தான நிலையைநோக்கி அமைதியாக சென்றுகொண்டிருந்தார். மருத்துவ நூல்களில் -புத்தகங்களில் தெரிவிக்கப்படும் அறிகுறிகள் எவையும் தென்படவில்லை.
ஒரு ஆபத்தான பாறையின் நுனியை நோக்கி அமைதியான பயணம்.
முல்லைத்தீவு மருத்துவமனையின் வைத்தியர்கள் குழுவினர் வேகமாகவும் உறுதியாகவும் செயற்பட்டனர்.
அவர்கள் ஒரு த்ரோம்பொலிடிக்கை அம்மாவிற்கு செலுத்தினர்.நாங்கள் இதனை இரத்த ஓட்டத்தை தடுக்கும் இரத்த கட்டிகளை கரைக்க உடைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் என இதனை அழைப்போம். .அம்மாவிற்கு தேவையாகயிருந்த மிகவும் விலைமதிப்பற்ற் நேரத்தை முல்லைத்தீவு மருத்துவர்கள் வழங்கினார்கள்.
Angioplasty and Stent Placement for the Heart
பின்னர் அம்மாவை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றினார்கள்,அங்கு போதுமான கையுறைகள் கூட இல்லாத மருத்துவர்கள் மற்றும் தாதிமார் குழுவினர் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அம்மாவிற்கு அஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) சத்திரசிகிச்சையை செய்தனர்
ஒரு ஸ்டெண்டை வைத்து உயிரை காப்பாற்றினார்கள்.அவர்களின் வாயிலிருந்து ‘மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம்” என்ற வார்த்தையை ஒரு தடவை கூடநான் கேட்கவில்லை,அந்த மருத்துவர்களின் திறமை குறித்து ஒருமுறை கூட எனக்கு சந்தேகம் எழவில்லை.
எனக்கு கடும் ஆச்சரியத்தை அளித்த விடயம் இதுதான் –
கடந்த மூன்றுவருட காலப்பகுதியில் இரண்டாயிரம் மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர்.
அவர்கள் பிரிட்டன்அவுஸ்திரேலியா மத்திய கிழக்கிற்கு சென்றுவிட்டனர்.சிறந்த ஊதியத்தை வழங்கும் சிறந்த நேரத்தை வழங்கும் சிறந்த விடயங்கள் அனைத்தையும் வழங்கும் எல்லா இடங்களிற்கும் அவர்கள் சென்றுவிட்டனர்.
இலங்கையிலிருந்து வெளியேறாமலிருந்த மருத்துவர்கள்- பிடிவாதக்காரர்கள் சுயநலமற்றவர்கள்- ஊதியம் சலுகைகளை விட குறிக்கோளிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள்.
நான் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்டேன்அவர்கள் தங்கள் பணிகளை இடைநிறுத்தாமல் ஆரவாரம் இல்லாமல், புகார் சொல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தனர்.
ஒரு இருதயநோய் நிபுணர் ஒருவர் ஒரு நோயாளிக்கு முதியவர் அருள்பாலிக்கும் நினைப்பு எதுவுமின்றி சரளமாக தமிழிலில் விளங்கப்படுத்திக்கொண்டிருந்ததை பார்த்தேன்.
ஒரு மருத்துவதாதியொருவர் தனது சொந்த குழந்தையை போல தலையணையை கவனமாக சரிசெய்வதை பார்த்தேன்.
குணப்படுத்துதலில் அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்தேன்.உண்மையான மகிழ்ச்சி
நான் ஒன்றை உணர்ந்தேன் – இந்த மக்கள் எங்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.
நோக்கத்திலேயே அமைதி உள்ளது நோக்கமே அமைதியை ஏற்படுத்துகின்றது. எண்ணிக்கையில் காணமுடியாத செல்வம் ஆனால் கௌரவத்தில் காணக்கூடிய செல்வம்.
அது இங்கு தாரளமாக கிடைக்கின்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் எனது தாயார் கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உயர் இரத்த அழுத்தம் கவலையளிக்கும் அறிகுறிகள்
ஆனால் நெறிமுறைகள் மற்றும் அதிகளவான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் சுகாதார கட்டமைப்பு எனது தாயார் மாரடைப்பினால் பாதிக்கப்படலாம் என்பதை தவறவிட்டுவிட்டது.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசமருத்துவமனை ஆபத்தை உடனடியாக இனம் கண்டு ஒரு சத்திரசிகிச்சையின்; துல்லியத்துடன் சிகிச்சையளித்தது
ஆனால்,அதிகாரதரப்பு,சேதமடைந்த வீதிகளிற்கு மத்தியில் சிறந்த முறையில் தொடர்ந்து இயங்கும் பொதுசுகாதார அமைப்பு முறையொன்றுள்ளது.அது ஒளிருகின்றது.அது உங்களை பெருமைப்படச்செய்கின்றது.
சிலவேளைகளில் அதனை தெளிவாக பார்ப்பதற்கு உணர்வதற்கு உங்கள் தாயாரின் இருதயத்தில் ஒரு ஸ்டென்ட் தேவைப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் உள்ள அந்த மருத்துவர்களிற்கும், தாதிமார்களிற்கும், மருத்துவபணியாளர்களிற்கும்,நம்பிக்கைகளிற்கும் நகரங்களிற்கும் இடையில் எனது தாயாரை கொண்டு சென்ற அம்புலன்ஸ் சாரதிகளிற்கும் நான் நன்றியை விட அதிகமாக கடமைப்பட்டிருக்கின்றேன்.
நாங்கள் பணத்தை வணங்கும் உலகத்தை உருவாக்கியிருக்கலாம்,ஆனால் அந்த ஒளிரும் விளக்குகள் கொண்ட மருத்துவமனையின் வார்டுகளிலேயே வாழ்க்கையை வணக்கும் மக்களை நான் சந்தித்தேன்.
தமிழில் ரஜீவன்