இந்தியாவின், பீகாரின் பாட்னா நகரில் ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் ஒருவர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, இந்திய ரயில்வே விதிமுறைகளின் படி சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களை பயணிகள் தாங்கள் உடன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
அவை பொதிகள் சேவையின் மூலம் மட்டுமே அனுப்ப முடியும். எனினும், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஓடும் ரயிலுக்குள், பயணிகள் இருக்கைக்கு இடையில் மோட்டார் சைக்கிளை செலுத்தும் இளைஞனின் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ “பீகாரின் சக்தி” என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தும் அந்த இளைஞனின் செயல் ரயிலில் பயணித்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல சமூக ஊடக பாவனையாளர்கள் இந்தப் பாதுகாப்பு மீறலுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இது ஒரு ரீல்ஸ் வீடியோவுக்காக ஏற்கனவே திட்டமிட்டு எடுக்கப்பட்டதா ? அல்லது ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது தொடர்பாக தற்போது ரயில்வே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
View this post on Instagram