வரதட்சணையாக மோட்டார் சைக்கிள், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்யுமாறு மாமியார் வற்புறுத்தியதாகப் பீகார் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தீப்தி என்ற பெண், முசாபர்பூரில் உள்ள மகளிர் பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரின்படி, 2021இல் திருமணமான தீப்தியை, முதலில் மனரீதியாகவும் பின்னர் உடல் ரீதியாகவும் மாமியார் குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர்.
கணவருக்குச் சிறுநீரகக் கோளாறு இருப்பதை அறிந்ததும், வரதட்சணைக்குப் பதிலாக சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்யுமாறு மாமியார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
தானம் செய்ய மறுத்ததால், தீப்தி தாக்கப்பட்டும், மாமியார் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளார். புகாரி ஏற்று, தீப்தியின் கணவர் உட்பட மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.