நீர்கொழும்பு – கொச்சிக்கடை, கம்மல்தொட்டுபொல கடற்கரையில் இன்று காலை முச்சக்கர வண்டிக்குள் இருந்து எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 56 வயதுடைய பொலிஸ் வாகன சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை உள்ளூர்வாசிகள் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும், அவர்கள் உடனடியாக கொச்சிக்கடை பொலிஸாருக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply