கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கத்தார் தனது வான்வெளியை முன்னெச்சரிக்கையாக மூடிய சில நிமிடங்களில், தோஹா மற்றும் லுசைல் முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், வானத்தில் ஏவுகணைகள் சீறிப் பாய்ந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
ஈரானின் அரசு தொலைக்காட்சி, இத்தாக்குதலை \”அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில்\” என்று தெரிவித்தது.
ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் \”அன்னன்சியேஷன் ஆஃப் விக்டரி\” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களையும் இலக்கு வைக்கட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கத்தார் வெளியுறவு அமைச்சகம் தாக்குதலை உறுதிசெய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை சீராக இருப்பதாக உறுதியளித்ததுடன், பதற்றத்தைக் குறைக்க பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியது.”,
SCENES ABOVE QATAR pic.twitter.com/znlqB11kIv
— Iran Observer (@IranObserver0) June 23, 2025