மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைசெய்யப்பட்டவர் மட்டக்களப்பு – குசலானமலை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று கொலைசெய்யப்பட்ட இளைஞனுக்கும் உறவினர் ஒருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது சந்தேக நபரான உறவினர், சம்பவ இடத்திலிருந்த இளைஞனின் தாயை தாக்கி காயப்படுத்திவிட்டு பின்னர் இளைஞனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேக நபரை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply