யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் தீ விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 69 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி விசிய பலத்த காற்றுடன் கூடிய மழையால் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் மெழுகுவர்த்தி ஏற்றிய போது அவரது ஆடையில் பற்றில் அவர் தீ காயங்களுக்கு உள்ளாகினார்.
யாழில் வயோதிபருக்கு எமனான மெழுகுவர்த்தி | A Candle For The Elderly In Jaffna
இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (23) உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.