ரெயிலில் பயணம் செய்யும்போது, ரெயில்வே போலீசார் காவலுக்கு இருந்தாலும் பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுதாகரிப்பாக இருக்க வேண்டும்.
எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஜன்னல் அருகே இருப்பவர்கள் தங்கச் செயின் அணிந்திருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என ரெயில் அதிகாரிகள் வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இருந்தபோதிலும் சிலர் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அப்படி ஒரு பெண் அஜாக்கிரதையாக இருப்பதை கவனித்த ஆர்.பி.எஃப். அதிகாரி ரிது ராஜு சவுத்ரி என்பவர், ரியலாக பாடம் கற்பிக்க வரும்பினார்.
அந்த பெண் போனில் மூழ்கியிருக்க, அதிகாரி ரிது அதை கவனித்து சற்றென்று பறித்துவிடுவார். இதனால் அந்த பெண் பயணி அதிர்ந்து வெளியில் பார்ப்பார்.
அதன்பின் அந்த அதிகாரி அந்த பெண்ணிடம், கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வெளியாகி, அதிகாரிக்கு பாராட்டு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.”,
View this post on Instagram

