வெளியே போகும் நபர்களில் பிரவீன்காந்திக்கு அடுத்தபடியாக திவாகரின் பெயர் அடிபட்டதில் ஆச்சரியமில்லை. ‘கலையரசன் வின்னர் ஆவார்’ என்று ஜோசியம் சொல்லி பிக் பாஸையே சிரிக்க வைத்தார் பார்வதி.
காக்கா இம்பூட்டு கக்கா போனதுக்காடா டீக்கடையை கொளுத்தி ஊரையே கலவரமாக்கினீங்க?’ – இந்த வடிவேலு காமெடி போல விஜே பாரு, வீட்டை சுத்தம் செய்த லட்சணத்தினால் எழுந்த சண்டை காரணமாக ஒட்டுமொத்த வீட்டையே களேபரமாக்கி விட்டார்.
ஒரு வீடு எத்தனை ஆடம்பரமாக, பளபளப்பாக, வண்ணமயமாக இருந்தாலும் அங்குள்ள மனிதர்கள்தான் அந்த வீட்டை கூடுதலாக அழகாக்குகிறார்கள். இதற்கான எதிர்மறை உதாரணம்தான் இந்த எபிசோட்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 3

