ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (09) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிர்வாகக் குழு கூட்டங்களிலும் இந்த தீர்மானம் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டையும் மக்களையும் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் நோக்கில், மக்கள் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இரு கட்சிகளும் தங்களது தனித்துவமான அடையாளங்களை பேணிக்கொண்டு இணைந்து செயல்படவுள்ளதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply