“ஒரு விவசாயி தனது புத்தம் புதிய மெர்சிடஸ் ஜி-வேகன் காரை வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
அந்த காரின் மதிப்பு சுமார் ரூ. 3 கோடி. விவசாயி தனது பாரம்பரிய உடையான வேட்டி, குர்தாவுடன் எளிமையாக வந்து காரை வாங்கினார்.
ஷோரூமுக்குள், விவசாயி உள்ளே நுழைந்து தனது புதிய காரை மூடி இருக்கும் உறையை திறந்ததும், அவரது மனைவி காருக்கு பொட்டு வைத்து, ஆரத்தி செய்கிறார்.
விவசாயி காரில் அமர்ந்ததும், சிறு பிரார்த்தனை செய்து, அதன் சிறப்பம்சங்களை ஆராய்கிறார். பின்னர் அமைதி,
திருப்தியான புன்னகையுடன் காரை இயக்கி, நம்பிக்கையுடன் ஷோரூமிலிருந்து வெளியேறுகிறார். விவசாயி ரூ.3 கோடிக்கு கார் வாங்கியது குறித்து வலைத்தளவாசிகள் பரபரப்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
View this post on Instagram

