கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் தவறான முடிவெ டுத்து தூக்கில் தொங்கிய யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த நாகநாதன் கிருசா (வயது-21) என்பவரா வார்.
கடந்த 14 ஆம் திகதி இரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிளிநொச்சி வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்ட நிலையில் நேற்று வியா ழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசார ணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை கிளிநொச்சி பொலி ஸார் நெறிப்படுத்தினர்.

Share.
Leave A Reply