“இவனுகளையெல்லாம் இப்படித்தான் ஹாண்டில் பண்ணணும். இப்ப பகைச்சுக்கக்கூடாது” என்று பிறகு கம்ருதீனிடம் நக்கலாக சொல்லிக் கொண்டிருந்தார் பாரு.
ஜூஸ் ஃபேக்டரி டாஸ்க் முடிவதற்குள் நம்மைப் பிழிந்தெடுத்து விட்டார்கள். அந்த அளவிற்கு ஒரே சத்தம், சண்டை. இத்தனை களேபரம் எதற்கு? ஏதோ கலர் கலராக தண்ணீரை பாட்டிலில் ஊற்றி பிறகு கீழே ஊற்றி விளையாடுவதற்கு.. சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..
“சுபிக்ஷாவிற்கு பாயின்ட் கொடுக்காத. அவளுக்கு குறைச்சுப் போடு” என்று நாள் முழுவதும் அனத்திக் கொண்டிருந்தார் பாரு. ஆனால் இறுதியில் சுபிக்ஷாதான் வென்றார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 18
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 Bigg Boss SO9 | EP – 18 | 23/10/2025

