டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது.
சம்பவத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, சமூக ஊடக தளமான ‘ரெடிட்’ இல் ஒரு மாணவரின் பதிவிட்ட பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
குண்டுவெடிப்பு
12 ஆம் வகுப்பு படிப்பதாகக் கூறப்படும் அந்த மாணவரின் பதிவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் 3 மணி நேரம் முன்னதாகவே பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மாலை 4 மணியளவில் அவரது பதிவில், ‘டெல்லியில் ஏதாவது நடக்கப் போகிறதா?. நான் இப்போதுதான் பள்ளியிலிருந்து வந்தேன். செங்கோட்டை மற்றும் மெட்ரோ நிலையங்களில் முன்பை விட அதிகமான பொலிஸார், இராணுவ வீரர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளனர்.
மெட்ரோவில் பயணிக்கும்போது கூட இவ்வளவு வீரர்களை நான் பார்த்ததில்லை. இங்கே என்ன நடக்கிறது?” என்று குறிப்பிட்டுள்ளார்.

