போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைத் தொடர் தனது கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
40 வயதான ரொனால்டோ, “கடந்த 25 ஆண்டுகளாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவேன்” என்று தெரிவித்தார்.
2026 உலகக் கோப்பை
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 உலகக் கோப்பை ரொனால்டோவுக்கு ஆறாவது உலகக் கோப்பைத் தொடராக அமையும்.இதுவரை ஐந்து உலகக் கோப்பைகளில் விளையாடிய ரொனால்டோ, போர்ச்சுகல் அணியை வழிநடத்தி யூரோ 2016 பட்டத்தை வென்றார்.
ஐந்து முறை பாலன் டி’ஓர் விருது வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் ரொனால்டோவுக்கு உண்டு. சர்வதேச மற்றும் கிளப் அளவில் 953 கோல்கள் அடித்துள்ள அவர், சர்வதேச ஆண்கள் கால்பந்தில் அதிக கோல் (143) அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ரொனால்டோவின் ஓய்வு அறிவிப்பு கால்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சவுதி அரேபிய கிளப் அல் நாஸ்ரில் விளையாடி வரும் ரொனால்டோ, உடற்தகுதியைப் பேணிவருகின்றார்.

