துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த அருண்நேரு அஸ்வன் என்ற நான்கு வயது சிறுவனாவார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காலை சிறுவன் வீட்டில் தந்தையுடன் இருந்துள்ளார். தந்தை உறங்கி எழுந்து பார்த்த போது சி றுவன் காணாமல் போயிருந்தார்.
காணாமல் போன சிறுவனை தேடிய போது கிணற்றுக்குள் சிறுவன் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்.
உடனடியாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனை தந்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் உறுதிப்படுத்தியிருந் தனர்.
இம் மரணம் தொடர்பில் பருத் தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணை மேற்கொண்டார். சாட் சிகளை பருத்தித்துறை பொலிசார் நெறிப்படுத்தினர்.

