கெஹல்பத்ர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றபுலனாய்வு திணைக்களத்திந்கு அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே, குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன்படி, நாட்டின் பிரபல நடிகை ஒருவரிடமிருந்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்து அதில் முக்கிய வேடத்தில் நடிக்க அழைப்பு வந்ததாக அவர் கூறியுள்ளார்.

சிஐடி விசாரணை

மேலும், குறித்த நடிகையும் கெஹல்பத்தர பத்மேவும் துபாயில் ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் சந்தித்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக பத்மே குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, பத்மே, தன்னை துபாயைச் சேர்ந்த பில்லியனர் தொழிலதிபர் என்று குறித்த நடிகைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் அவரது போலி உருவப்படத்தால் ஏமாற்றப்பட்டு இந்த படத்திற்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், விசாரணையில், சம்பந்தப்பட்ட நடிகை துபாய்க்கு அடிக்கடி பயணிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவிடம் கண்டெடுக்கப்பட்ட கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகளை ஆய்வு செய்ததில், அவருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் பல மொடல்கள் மற்றும் நடிகைகளிடம் சிஐடி இதுவரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Share.
Leave A Reply