ராஜா – ராணி டாஸ்க் என்பது பிக் பாஸில் வழக்கம்தான். ஆனால் சீசன் 9-ல் நிகழ்ந்து கொண்டிருக்கிற டாஸ்க், எல்கேஜி பிள்ளைகள் போடும் ஸ்கூல் டிராமாவை விடவும் மோசமாக இருக்கிறது.
என்னதான் களம் அமைத்துத் தந்தாலும் சொதப்புவதிலும் தங்களுக்குள் அடித்துக்கொள்வதிலும் பெரும்பாலான போட்டியாளர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.
‘பாண்டி நாட்டுக் கொடியின் மேல’ என்கிற பாடலை காலையில் போட்டு ராஜா – ராணி டாஸ்க்கிற்கான குறியீட்டை பதிவுசெய்தார் பிக் பாஸ்.
காலையில் திவாகர் பற்ற வைத்த நெருப்பு, நீண்ட நேரத்திற்குப் பற்றி எரிந்தது. “கிச்சன் டீம்ல ஆளுங்களை மாத்தாதீங்க.. புதுசு புதுசா ஆளை மாத்தாதீங்க” என்று சபரியிடம் சொன்னார் திவாகர். ரம்யா கிச்சன் டீமிற்குள் வருவது திவாகருக்குப் பிடிக்கவில்லை. சாப்பாடு போடுவதில் பார்ஷியாலிட்டி காட்டுகிறார் என்பது காரணம்.
“சமையல் செய்யறவங்க மாற மாட்டாங்க. ஹெல்ப்பர்தான் மாறுவாங்க. நிறைய ஆளுங்க இருக்காங்க. அவங்களுக்கும் வேலை கொடுக்கணுமில்ல?” என்றார் சபரி. இந்த விஷயத்தை ரம்யாவிடம் போய் பற்ற வைத்தார் சுபிக்ஷா.
பொழுதுபோகாமல் ஃப்ரீஸ் டாஸ்க் மாதிரி விளையாட ஆரம்பித்தார். முகத்தை கோணலாக்கிக் கொண்டு உறைந்து இருக்க வேண்டும். நாக்கை நீட்டி திவாகர் இருந்த போஸைப் பார்த்த வினோத் “புளிய மரத்துல மேல இடிச்ச லாரி மாதிரி இருக்கு மூஞ்சு.. இப்படியே இவர் பேசாம இருந்தா நமக்கு நிம்மதி” என்றெல்லாம் சகட்டுமேனிக்குக் கிண்டலடித்தார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 37
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 37| 11/11/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 36
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 36| 10/11/2025

