பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமான இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி, பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 188 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. மகா கூட்டணி 51 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில், பெரும்பான்மை பெற 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முன்னிலை நிலவரம்
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்- 122

ஜன் சுராஜ் கட்சியின் நிலை என்ன?
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் எனும் கட்சியை நிறுவி பிகார் தேர்தலில் போட்டியிட்டார். 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இவரது கட்சி நிறுத்தியது. காலை 10.30 மணி நிலவரப்படி, 1 தொகுதியில் மட்டுமே இவரது கட்சி முன்னிலை பெற்று வருகிறது.
மைதிலி தாகூர் முன்னிலை
விளம்பரம்
இந்த தொகுதியில் மைதிலியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வினோத் மிஸ்ரா மற்றும் ஜன் சுராஜ் கட்சியின் பிப்லப் குமார் சவுத்ரி போட்டியிட்டனர்.
தேஜஸ்வி யாதவ் முன்னிலை
இவரை எதிர்த்து பாஜகவின் சதீஷ்குமார் மற்றும் ஜன் சுராஜ் கட்சியின் சஞ்சல் குமார் போட்டியிட்டனர்.
தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவு
தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள தரவுகளின் படி, 2 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் லோக் ஜனசக்தி கட்சியின் சஞ்சய் குமார் சிங் முன்னிலை பெற்றுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேஜ் பிரதாப் ஜன்சக்தி தள் எனும் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.
முக்கியத்துவம் ஏன்?
இந்த ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் சில காரணங்களால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பிகாரில் 1951ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, இந்தத் தேர்தலில்தான் அதிகளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த முறை பிகாரில் 67.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட 9.6% அதிகம்.
ஆண் வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது பெண் வாக்காளர்களில் 8.15 சதவிகிதம் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
ஆண் வாக்காளர்களில் 62.98 சதவிகிதத்தினரும், பெண் வாக்காளர்களில் 71.78 சதவிகிதத்தினரும் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். 3.51 கோடி பெண் வாக்காளர்களும் 3.93 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ள பிகாரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.45 கோடியாக உயர்ந்துள்ளது.
நிதிஷ் குமாருக்கு சாதகமா?
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) முன்னிலை வகிக்கிறது.
தேர்தலுக்கு சற்று முன்பு, செப்டம்பர் மாதத்தில் நிதிஷ் குமார் முதலமைச்சர் பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்கினார். அதில், பிகார் முழுவதும் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு பத்தாயிரம் ரூபாய் தொகை அனுப்பப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும், தலா 10,000 ரூபாய் செலுத்தப்பட்டது.
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவொரு தொடர்ச்சியான திட்டம் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. எனவே, பெண்களின் உற்சாகமான பங்கேற்பு நிதிஷ் குமாருக்கு சாதகமாக அமையும் என நம்பப்படுகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
நவம்பர் 11ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கும் என்று கணித்துள்ளன.
ஆக்ஸிஸ் மை இந்தியாவின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெறும், ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கலாம். என்.டி.ஏ-வுக்கு 121 முதல் 141 இடங்களும், மகா கூட்டணிக்கு 98 முதல் 118 இடங்களும் கிடைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பிகாரில் தேர்தல் களத்தில் இறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு சில இடங்கள் கிடைக்கலாம்.
டுடேஸ் சாணக்யாவின் கருத்துக் கணிப்புப்படி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 160 இடங்களைப் பெறலாம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 77 இடங்கள் கிடைக்கலாம்.
மேலும், “தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதாக கருத்துக் கணிப்புகள் கூறியபோது, மக்கள் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தனர். இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை நம்ப முடியுமா? வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அதிகாரிகள் மீது உளவியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியைத் தவிர இது வேறெதுவும் இல்லை” என்று தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தார்.
தேஜஸ்வி யாதவ் இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில் 85க்கும் மேற்பட்ட பேரணிகளில் உரையாற்றியுள்ளார். பிகாரில் தான் ஆட்சி அமைத்தால் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
பிகார் மக்களில் 16 முதல் 18 சதவிகிதம் பேர் மட்டுமே நிதிஷை முதலமைச்சராக்க விரும்புவதாகக் காட்டிய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை மேற்கோள் காட்டிய தேஜஸ்வி, கருத்துக் கணிப்பு முடிவுகளை நிராகரித்துள்ளார்.
– இது, பிபிசி செய்தி