சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள காணொளியொன்றின் மூலம் மகேந்திரசிங் தோனி நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

சமீப காலமாக ஐபிஎல் தொடர்பான பல வதந்திகள் பரவிவரும் நிலையில், எம்.எஸ்.தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஆனால் இதற்கு முன்னர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் சமூகவலைத்தளமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலும் தோனி விளையாடுவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் 2026ஆம் ஆண்டிற்கான ஐபிஎல்லில் அவர் விளையாட மாட்டாரட என்ற தகவல்கள் தற்போது வெளியான செய்தியானது சென்னை அணி இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதி செய்துள்ளது.

குறித்த காணொளியில்,தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.

அதற்கு ONE LAST TIME என்று பதில் கொடுத்து தோனி ரசிகர்களை சி.எஸ்.கே. அணி உற்சாகப்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version