பதுளையில் தனது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக பலத்த தீக்காயங்களுக்குள்ளான தாய் தற்போது பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 11 ஆம் திகதி மாலை சந்தேக நபரான சிறுமியை கைது செய்தனர்.
காதல் உறவு
பதுளை பகுதியில் உள்ள பாடசாலையில் படிக்கும் சிறுமி, ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.
இதை அறிந்ததும், அவரது தாயார், நன்கு படித்து வேலை கிடைத்த பின்னர் பொருத்தமான துணையை தேடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மகள், தாயின் படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சந்தேக நபரான சிறுமி தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.காதலுக்கு தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையினால் இவ்வாறு செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

