நடிகை கஜோல்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது திருமணமாகி குழந்தைகள் பெரியவர்களாகிய பின்பும் நாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை கஜோல். தமிழில் மின்சார கனவு படத்தில் ஆரம்பித்து விஐபி 2 படம் வரை அவரின் நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திருமண உறவு குறித்து தெரிவித்த கருத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

பிரியமானவளே படக்கதை

அதில், திருமணங்கள் காலாவதி தேதியுடன், மீண்டும் புதுப்பித்தல் தேதியுடன் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி நடக்கும்போது யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது, மன கஷ்டங்களும் வராது என்று தெரிவித்திருக்கிறார்.

அவர் அப்படி சொன்னதற்கான காரணம், 26 ஆண்டுகள் அஜய் தேவ்கன்னுடன் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த ஜோடி மீது ரசிகர்களுக்கு எப்போதும் தனிமதிப்புள்ளது.

இப்படியிருக்கையில் அவர் பேசிய விஷயம் சர்ச்சையாகியது. நடிகை கஜோலின் கருத்து, விஜய் – சிம்ரன் நடிப்பில் வெளியான பிரியமானவளே படக்கதையை போன்றுள்ளது என்றும் இந்த ஐடியா நல்லா இருக்கு என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Share.
Leave A Reply