இலங்கையை சேர்ந்த 3,469 இளைஞர்களுக்கு தென் கொரியா E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரியாவின் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென் கொரியாவில் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளுக்குத் தகுதி பெற்ற 77 இளைஞர்கள் சமீபத்தில் தென் கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.

வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பம்

தென் கொரியாவில் உற்பத்தி, கட்டுமானம், மீன்பிடி சேவைகள் மற்றும் விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகள் E-9 விசா பிரிவின் கீழ் இலங்கையை சேர்ந்த இளைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த தேர்வுமுறைமை கணினியில் மட்டுமே நடத்தப்படும் என்றும்,மேலும் எந்த தரப்பினரையும் பாதிக்காது என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

Share.
Leave A Reply