சட்ட விரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை (13) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மரைன் பொலிஸார் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை (13) காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வந்து இறங்கியது தெரியவந்துள்ளது.

அவரை கைது செய்த மரைன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சூசை தாசன் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மரைன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்

Share.
Leave A Reply