பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியை பாதுகாக்க, தீவிர பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரை தவிர, சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவப் படையும் மைதானத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் மைதானம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு நாட்டுத் தலைவருக்கு வழங்கப்படுவதற்கு இணையான ஒன்றாகும்.

போட்டியின்போது எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கவும், வீரர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மைதானத்தின் அனைத்துப் பகுதிகளும் 24 மணி நேரமும் அதிநவீன கண்காணிப்பு உபகரணங்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

மைதானத்தை சுற்றி பல உலங்கு வானூர்த்திகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து எழுந்த பாதுகாப்பு அச்சறுத்தலை தொடந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply