நுவரெலியா, வலப்பனை ஊடாக ஹங்குரன்கெத்த வீதி போக்குவரத்திற்கு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இரண்டு இடங்களில் ஏற்பட்டு பாரிய மண் சரிவு காரணமாக பொது மக்களின் பாது காப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பல இடங்களிலும் சிறிய மண் சரிவுகள் எற்பட்ட பொழுதிலும் அவற்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பிரதேச சபை இணைந்து அவற்றை அப்புறப்படத்திய பொழுதும் இந்த மண்சரிவை உடனடியாக அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
அதேநேரம் வீதியின் பல இடங்களிலும் இடிந்த நிலையில் இருப்பதால் வீதி போக்குவரத்திற்கு உகந்த நிலையில் இல்லை.
அதேநேரம் நாளை திங்கட்கிழமை (01) குறித்த பகுதியில் மண்சரிவு அகற்றப்பட்டு ஒரு பகுதியில் மாத்திரம் போக்குவரத்திற்கு திறப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். ஆனாலும் இது தொடர்பாக உறுதிப்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கின்றார்கள்.

