தமிழ் சினிமாவின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான கவின், ‘லிப்ட்’ மற்றும் ‘டாடா’ போன்ற வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். எனினும், அதன்பின்னர் வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சமீபத்தில், கவின் நடிப்பில் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ‘மாஸ்க்’ (Mask). இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றியிருந்தார். ‘மாஸ்க்’ திரைப்படம் கடந்த நவம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வசூல் நிலவரம்:

‘மாஸ்க்’ திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, வெளியான முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் குறித்துப் பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது 10 நாட்களில் இப்படம் செய்துள்ள உலகளாவிய வசூல் குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

  • ‘மாஸ்க்’ திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply