‘டிட்வா’ சூறாவளியின் கோர தாண்டவத்தால் நாடு முழுவதும் வரலாறு காணாத பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நாட்டு மக்களுக்கு நேற்று (நவம்பர் 30, 2025) உணர்ச்சிப்பூர்வமான உரை ஆற்றினார்.

ஜனாதிபதி தனது உரையில் கூறியதாவது:

“எந்த இருளிலும் ஒளி பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.”

  • சவால் நிறைந்த மீட்பு நடவடிக்கை: “ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம்.”

  • முழு நாடும் பேரழிவு: முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது என்றும், நாலாபக்கங்களிலிருந்தும் நாடு நீரில் மூழ்கிப் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் கடினமான ஒரு செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

  • மனிதநேயம் அசையாது: “இந்த கொடூரமான இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.”

  • உறுதியுரை: “எனது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்துடன், இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம். எனவே, நாம் ஒன்றாக எழுச்சி பெறுவோம். இந்த கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்துவோம் . சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி:

இறுதியாக, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்த அவர், “இறந்தவர்கள் அனைவரும் நமக்கு ஒரு இலக்கம் அல்ல. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பெயர், ஒரு முகம் மற்றும் ஒரு கதை உள்ளது” எனக் கூறி, இழந்தவர்களின் வேதனை என்றென்றும் எம்முடன் இருக்கும் என்ற யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply