அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “எனக்கு நோபல் பரிசு வேண்டாம்” என்று தெளிவாக அறிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அவர், தன்னுடைய பதவிக்காலத்தில் நிறுத்தப்பட்ட போர்களை நினைவு கூறினார்.

டிரம்ப் கூறியதாவது:

  • “இந்தியா – பாகிஸ்தான் போர் உட்பட 8 பெரிய போர்களை நான் முடிவு செய்து வைத்துள்ளேன்.”

  • “ஒவ்வொரு முறையும் ஒரு போரை முடிக்கும்போது எனக்கு ‘நோபல் பரிசு கிடைக்கும்’ என அவர்கள் கூறுவார்கள்.”

  • “ஆனால் உண்மையில் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் நான் பேராசைப்பட விரும்பவில்லை.”

அத்துடன், ரஷ்யா-யுக்ரைன் போரைக் குறித்து, “அந்தப் போரை நான் முடிவுக்கு கொண்டு வந்தால் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என சொல்கிறார்கள்” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாகவும், அதை தடுக்க வெனிசுலாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். அமெரிக்காவுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ய முயற்சிக்கும் எந்தக் குழுவும் எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply