தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வரிசையில் இருப்பவர் நடிகை சமந்தா. சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் குறைந்த பட வாய்ப்புகளே இருந்தாலும், பின்னர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்ததால் அவர் புகழ் மிக வேகமாக உயர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் கோளாறு காரணமாக சினிமாவில் இருந்து ஓரளவு ஓய்வு எடுத்திருந்த சமந்தா, போட்டோஷூட்கள் மற்றும் தனிப்பட்ட திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வழக்கமாக பகிர்ந்து வருபவரும் ஆவார்.
சமீபத்தில், சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக வலம்வந்த செய்திகளை இருவரும் மறுத்திருந்தனர். இருப்பினும், இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் எளிமையான முறையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களே மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், திருமணத்திற்கு பின் சமந்தா கழுத்தில் மஞ்சள் தாலியுடன் விமான நிலையத்தில் காணப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.
ரசிகர்கள் இந்த புதிய புகைப்படத்தை பெரிதும் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.

