உலகின் முதலிருப்பாளரான எலான் மஸ்க், உலகம் ஒரு பெரிய உலகளாவிய மோதலுக்கு நெருங்கிக் கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார். அணு ஆயுத சக்திகளின் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலக நிர்வாகத்தின் செயல்திறன் குறைவதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

X தளத்தில் ஒரு பயனர்,
“அணு ஆயுதங்கள் வலிமை வாய்ந்த நாடுகளுக்கிடையில் போரை தடுக்கின்றன; இதனால் அரசாங்கங்கள் செயலற்றுப் போயுள்ளன” என்று பதிவிட்டார்.

இந்த பதிவிற்கு பதிலளித்த எலான் மஸ்க்,
“போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று கேட்கிறீர்களா? என் கணிப்புப்படி 2030க்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் 5 வருடங்களில் அல்லது அதிகபட்சம் 10 வருடங்களில் அது நடக்கும்.”
என்று வெளிப்படையாக கூறினார்.

இதில் அவர் எந்தப் போரை குறிப்பிட்டார் என்பதையோ, அதற்கான காரணங்களைப் பற்றிய மேலும் விவரங்களையோ குறிப்பிடவில்லை. இருந்தாலும், உலக அரசியல், தொழில்நுட்ப, ராணுவ துறைகளில் புகழ்பெற்றவர் என்பதால் அவரது இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மேலும், அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் அரசாங்க செயல்திறன் துறை (DOGE) தலைவராக இருந்த அனுபவம் காரணமாக, மஸ்கின் இந்த அறிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Share.
Leave A Reply