கீர்த்தி சுரேஷ் நடித்த ரிவால்வர் ரீட்டா படம் ஜே. கே. சந்துரு இயக்கத்தில் கடந்த 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ராதிகா சரத்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி, சென்ட்ராயன் போன்ற பலர் நடித்திருந்தனர். இசை அமைப்பு ஷான் ரோல்டனின்.

வெளியான பிறகு படத்துக்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. கீர்த்தி சுரேஷ் நடித்த லேடி-சென்ட்ரிக் ஆக்ஷன் கமெர்ஷியல் படமாக இருந்தாலும், கதைக்களம் மற்றும் ஸ்கிரீன் ப்ளே பலரையும் கவரவில்லை. இதனால், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் பெரிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை.

7 நாட்களின் வசூல் விவரம்

சமீபத்தில் வெளியான பாக்ஸ் ஆபிஸ் தகவல்படி,
7 நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ. 4 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

இது படத்தின் கிட்டத்தட்ட இறுதி வசூல் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்புக்கு இணையாக படம் செயல்படாததால், theatrical run விரைவில் முடிவடையலாம் என திரையரங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply