கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கனடாவின் மேற்குப் பகுதியிலிருந்து அமெரிக்க கிழக்குக் கடற்கரை வரை “பூமியிலேயே மிகத் தீவிரமான குளிர்ப் பகுதி” உருவாகும் என அமெரிக்காவின் எம்.ஐ.ரீ பல்கலைக்கழக வானிலை ஆய்வாளர் ஜூடா கோஹென் எச்சரித்துள்ளார்.

டிசம்பர் மூன்றாவது வாரத்தில், அதாவது கிறிஸ்துமசுக்கு முன்பாக, கனடா முதல் அமெரிக்க கிழக்குக் கடற்கரை வரை அசாதாரணமான ‘அதி தீவிர குளிர்’ (extreme cold) பரவும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த நவம்பரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொண்ட கணிப்பின் மூலம் இந்த ஆபத்தான வானிலை மாற்றத்தை கோஹென் முன்கூட்டியே எச்சரித்திருந்தார்.

“சைபீரியாவை விட குளிராக இருக்கும் என்று சொல்லவில்லை; ஆனால் அந்தப் பகுதிகளுக்கு இயல்பை விட மிக அதிகமான குளிர் நிலவும்” என அவர் கூறியுள்ளார்.

இதற்கு முக்கிய காரணமாக போலார் வார்டெக்ஸ் (Arctic Polar Vortex) நீண்டு ‘ரப்பர் பேண்ட்’ போல இழுக்கப்படுவதையே கோஹென் குறிப்பிடுகிறார். இதன் விளைவாக சைபீரியாவில் உறைந்த குளிர்காற்று மண்டலம் முதலில் கனடாவுக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் பாயும் அபாயம் உள்ளது.

இத்தகைய ‘ஸ்ட்ரெட்ச்’ (stretch) நிகழ்வுகள் டிசம்பர் முழுவதும் பல முறை நிகழலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Share.
Leave A Reply