மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது திருவருகைக் காலத் திருமடலில் புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரின் கருத்துப்படி, பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியில் வந்த புதிய அரசு ஊழல் ஒழிப்பு, போதைவஸ்தை கட்டுப்பாடு மற்றும் பொருளாதார நிலையை உறுதியாக்க முயற்சிகளில் பாராட்டுக்குரிய செயல்பாடுகளை எடுத்துள்ளது.

ஆனால், தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, இறுதிப் போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதைக் கவலைக்குரிய விடயமாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழர் நலனுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மன்னார் மறைமாவட்டத்தில் கடந்த அக்டோபர் 27–29 அன்று நடைபெற்ற மேய்ப்பு பணி மாநாடு “தூய ஆவியின் ஆண்டாக” பிரகடனப்படுத்தப்பட்டு சிறப்பாக நடந்தது. குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் உட்பட சுமார் 200 பேர் இதில் கலந்து கொண்டு பிரத்தியேக மேய்ப்புப்பணி திட்டங்களை உருவாக்கி பங்குகளுக்கு அனுப்பியுள்ளனர்.

மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொரு பங்கும், ஆணைக்குழுவும், துறவற இல்லமும் தமது சூழ்நிலை, வசதி, வாய்ப்புகளை கருத்தில் கொண்டு தனிப்பட்ட மேய்ப்புப் பணி திட்டங்களைத் தீட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply