தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை சுனைனா, முதல் படத்திலிருந்தே சிறந்த வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், ரெஜினா, சில்லுக்கருப்பட்டி, தொண்டன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியாக நடித்துவரும் சுனைனா, வெப் தொடர்களிலும் தன்னை நிரூபித்துள்ளார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட், இன்ஸ்பெக்டர் போன்ற வெப் தொடர்களில் அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது.

அண்மையில், சுனைனாவுக்கு காதலர் இருப்பதாக பல செய்திகள் பறந்தன. ஆனால் எந்த வித உறுதிப்பாட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அந்த தகவல் உறுதி செய்யும் வகையில் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுனைனா தனது காதலருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட அந்த போட்டோவை UAE Influencer மற்றும் Content Creator ஆன Khalid Al Ameri தான் தனது Instagram-ல் பகிர்ந்துள்ளார். அவருடைய பிறந்தநாள் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.

இதனால், சுனைனாவின் காதலர் இவர் தான் என்ற தகவல் தற்போது இணையத்தில் சூடுபிடித்து பரவி வருகிறது.

ரசிகர்களும் இந்த புகைப்படத்தை பெரிதும் வைரல் செய்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Share.
Leave A Reply