தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிய நடிகை மாளவிகா மோகனன், விஜய்யுடன் நடித்த மாஸ்டர் படம் மூலம் அனைவருக்கும் அறிமுகமானார். அதன் பிறகு விக்ரமுடன் நடித்த தங்கலான் படத்திலும் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, அவர் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் நடிப்பைத் தாண்டி மாளவிகா மோகனனுக்கு அனைவரும் அறியாத ஒரு திறமை உள்ளது. அது வனவிலங்கு புகைப்படக்கலை (Wildlife Photography).

சூழல் கிடைக்கும் நேரங்களில் கேமராவை எடுத்துக்கொண்டு காட்டு விலங்குகளை படம் பிடிக்க தனியாகவே கிளம்பிவிடுவார். விலங்குகளை அருகில் இருந்து படம் பிடிப்பது அவருக்கு ஒரு பொழுதுபோக்கும், ஆர்வமாகவும் இருக்கிறது.

சமீபத்தில், காடு பகுதிக்கு சென்று புலிகளை படம் பிடித்த போது எடுத்த சில புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

“மாளவிகாவுக்கு இப்படி ஒரு திறமையா?” என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படுகின்றனர்.

அவர் எடுத்த வனவிலங்கு புகைப்படங்கள் தற்போது பலராலும் பாராட்டப்படுகின்றன.

Share.
Leave A Reply