தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்க்கு, எந்த படமாக இருந்தாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைப்பது வழக்கம். மார்க்கெட், வியாபாரம், பாக்ஸ் ஆபிஸ் அனைத்திலும் அவரது படங்கள் தொடர்ந்து சாதனை படைத்துக்கொண்டே இருக்கின்றன.

விஜய் தற்போது தனது திரைப்பயணத்தின் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். படம் வரும் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 27ஆம் தேதி மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இதற்கிடையில், நடிகர் வையாபுரி விஜய் நடித்த போக்கிரி படம் குறித்து ஒரு பழைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில், போக்கிரி படத்தின் போது விஜய் பிரபுதேவாவுடன் ஒரு பாடலில் கண்டிப்பாக நடனமாட வேண்டும் என்ற ஆசை கொண்டதாக வையாபுரி கூறுகிறார்.

விஜய் தனது விருப்பத்தை வையாபுரியிடம் பகிர்ந்தபோது, வையாபுரியும் நடிகர் ஸ்ரீமனும் பிரபுதேவாவிடம் இதைப் பற்றி பேசிச் சொன்னதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த நேரத்தில் பிரபுதேவா, “நான் அவருடன் தோன்ற வேண்டாம்… முதலில் வேண்டாம்” என்று மறுத்துவிட்டதாக வையாபுரி கூறியுள்ளார்.

ஆனால் இருவரும் தொடர்ந்து நச்சரித்து கேட்டதன் பிறகு தான் பிரபுதேவா சம்மதித்தார் என்றும் வையாபுரி சிரித்து நினைவுகூர்ந்துள்ளார்.

Share.
Leave A Reply