இத்தனை பலவீனமான போட்டியாளரையா பிக் பாஸ் டீம் தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பியிருக்கிறது?.. ஆச்சரியம்.
ரெட்ரோ சினிமா அணியை ஜெயிக்க வைத்து, தனது அணியில் உள்ள அனைவரையும் காப்பாற்றிய பிரஜின், இந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டது சுவாரசியமான முரண்.
எதிர்பார்த்தபடியே சான்ட்ரா கதறித் தீர்த்தார். பிரிவின் துக்கம் தாங்காமல் வெளியே ஓடினார்.
இந்த கேமிற்குள் வரும்போது இதெல்லாம் நடக்கும் என்பது அவருக்குத் தெரியாதா?
கணவரின்மீது பாசம் காட்டுவதாகட்டும், மற்றவர்களின்மீது வன்மம் காட்டுவதாகட்டும், எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரீம் லெவலில் செயல்படும் சான்ட்ரா ஒரு புதிரான காரெக்டர்.
“எதையாவது கேட்டு ஷோவை ஆரம்பிப்போம். எதைக் கேட்டாலும் கரகாட்டக்காரன் படத்தின் செந்தில் மாதிரிதான் இவங்க மூஞ்சை வெச்சிக்கப் போறாங்க” என்று விரக்தியுடன் உள்ளே வந்தார் விசே.
வினோத்திற்கு தரப்பட்ட டிஆர் விக்கை, சற்று பட்டி டிங்கரிங் பார்த்து விசேவிற்கு போட்டு விட்டது போல ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் லுக்கில் இருந்தார் விசே.
“மத்தவங்க உழைப்பை எடுத்துக்கிட்டு, அவங்களை மிதிச்சி மேல வர்றவங்க யாரு. ரெண்டு பேரைச் சொல்லுங்க?” என்று முதல் கேள்வியை ஆரம்பித்தார் விசே.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 63
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 63|07/12/2025

