நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றரை மீறும் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், கடும் மழை பெய்யும் போது பலத்த காற்று, மின்னல் தாக்கம் போன்ற அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலவும் கனமழையின் காரணமாக பல பகுதிகளில் தாழ்வான நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதற்கிடையில், கம்பளையில் ஒரே வீட்டில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூரையை உடைத்துக்கொண்டு ஒருவர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே எதிர்வரும் 24 மணி நேரம் பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலத்துறை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

Share.
Leave A Reply