இலங்கையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவர், பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, புவிநடுக்கம் உட்பட பல முக்கியத் தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.
அவர் வெளியிட்ட புவி நடுக்கம் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்த விழிப்புணர்வுப் பதிவுக்கு அறிவியல் ஆதாரமற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். “ஒரு கருத்து தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனம் எப்பொழுதும் வரவேற்கத்தக்கது; ஆனால் அது வெறும் வாய்ச் சொல்லில் இருக்காமல் அறிவியல் பூர்வமான ஆதாரங்களோடு இணைந்து இருப்பதுதான் விரும்பத்தக்கது” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

