2025 ஆண்டிற்கான உலகின் மிக அழகான பெண்கள் – டாப் 10 பட்டியல் IMDB தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் பிரபலமான நடிகைகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்திய ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு இந்திய நடிகையும் டாப் 5ல் உள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தை ஹாலிவுட் நடிகை மார்கொட் ராபி பெற்றுள்ளார். அழகும் நடிப்புத் திறமையும் ஒன்றாக கலந்தவர் என்ற பெயர் பெற்ற இவர், 2025ன் உலகின் மிக அழகான பெண் என IMDB தேர்வு செய்துள்ளது.

இரண்டாம் இடத்தில் அமெரிக்க நடிகை ஷைலீன் உட்லிவும், மூன்றாவது இடத்தில் சீன நடிகை தில்ரபா தில்முரத்வும் உள்ளனர். நான்காவது இடத்தில் கொரிய நடிகை நான்சி மெக்டோனி இடம்பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே நடிகையாக க்ரீத்தி சனோன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

மீதமுள்ள டாப் 10 இடங்களில்

  • ஹனியா அமீர்

  • ஜூலியா பட்டர்ஸ்

  • மெக்கென்ன கிரேஸ்

  • குளோ கிரேஸ் மோரெட்ஸ்

  • ஏரியல் வின்டர்
    ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

IMDB வெளியிட்ட இந்த பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகளவில் பிரபலமான பல திறமையான நடிகைகள் இடம்பிடித்ததால், இந்த பட்டியல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply