தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை, இன்று முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (டிசம்பர் 9) முதல் 19ஆம் திகதி வரை இடியுடன் கூடிய மழை தொடரக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Share.
Leave A Reply