-கொட்டிய குப்பையுடன் தலைதெறிக்க ஓடினார்-

யாழ்ப்பாணத்தில் பொது இடத்தில் குப்பையை கொ ட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்ற யாழ்.மாநகர சபை யின் ஜனநாய தமிழ்த் தேசி யக் கூட்டணியின் (சங்கு) உறுப்பினர் ஒருவர் பொதுமக் களிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கந் தபுராண வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குப்பையை பொதியில் கட்டியவாறு மோட்டார் சைக் கிளில் வந்த குறித்த மாநகர சபை உறுப்பினர் வீதியில் போட்டு விட்டு செல்வதை அவதானித்த அப்பகுதி மக் கள், குறித்த நபரை பிடித் ததுடன் கடும் எச்சரிக்கை செய்து குப்பையை மீண்டும் எடுத்துச் செல்ல வைத்தனர்.

குப்பைகளை அகற்றி பொது இடங்களை சுத்தமாக பேணுவதற்கு பொறுப்பாக வுள்ள மாநகர சபை உறுப் பினரே, குப்பையை திருட் டுத்தனமாக போட்டுவிட்டு
செல்வதற்கு முயன்றமை பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி யுள்ளது.

யாழ்.மாநகர சபையின் கடந்த அமர்வுகளின் போது. குறித்த உறுப்பினர் சுத்தம், சுகாதாரம் என பல வியாக் கியானங்களை சபையில் தெரிவித்திருந்தமை குறிப்பி டத்தக்கதாகும்.

Share.
Leave A Reply